உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 7க்கு தள்ளி வைக்கப்பட்ட 'அஸ்திரம்'

மார்ச் 7க்கு தள்ளி வைக்கப்பட்ட 'அஸ்திரம்'


அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில், கேஎஸ் சுந்தரமூர்த்தி இயக்கத்தில், ஷாம், நிரா, ரஞ்சித், வெண்பா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அஸ்திரம்'. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது. படத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தற்போது ஒரு வாரம் தள்ளி வைத்து மார்ச் 7ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

மார்ச் 28ம் தேதி 'அகத்தியா, சப்தம்' ஆகிய படங்கள், மார்ச் 7ம் தேதி 'அட்ரஸ், கிங்ஸ்டன், ஜென்டில்வுமன், நிறம் மாறும் உலகில்' ஆகிய படங்கள் வெளியாவதாகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது மார்ச் 7 வெளியீட்டில் 'அஸ்திரம்' படமும் இணைந்துள்ளது.

மார்ச் மாத முதல் வாரத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான முழுஆண்டு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளன. அதனால் மார்ச் மாதத்தில் தியேட்டர்களுக்கான ரசிகர்கள் வருகை குறைய ஆரம்பிக்கும். அதன்பின் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு வரையிலும் மற்ற வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் நடக்கும். எனவே, அடுத்த மாதத்தில் வெளியாகும் படங்கள் இந்த சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !