மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
224 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
224 days ago
சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வரும் படம் 'பராசக்தி'. இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.
படத்தில் மற்றுமொரு நடிகராக பிரித்வி பாண்டியராஜன் இணைந்துள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகனான பிரித்வி கடந்த வருடம் வெளிவந்த 'ப்ளூ ஸ்டார்' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. அதன் பிறகு இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து எடுத்துக் கொண்டு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'பராசக்தி' உள்ளது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையப்படுத்திய பீரியட் படமாக இப்படம் உருவாகி வருகிறது. சிவாவும், பிரித்வியும் உள்ள புகைப்படத்தில் கூட அவர்கள் தோற்றம் அந்தக் கால இளைஞர்களாக உள்ளது.
224 days ago
224 days ago