உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விராட் கோலியைப் பாராட்டிய பாகிஸ்தான் நடிகை

விராட் கோலியைப் பாராட்டிய பாகிஸ்தான் நடிகை


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. முன்னணி வீரரான விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்தார். அவரது ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர்களும் ரசித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பாகிஸ்தான் நடிகையான மாயா அலி என்பவர் விராட் கோலி சதமடித்த வீடியோவைப் பகிர்ந்து, “அவருக்கு மிகப் பெரிய மரியாதை… ராஜா என்பதற்கான காரணம்”, எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் நாட்டில் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள நடிகை ஒருவர் விராட்டைப் புகழ்ந்து பதிவிட்டது இந்திய ரசிகர்களாலும் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !