தனம் சீரியல் குழுவினரின் புதிய புரொமோஷன் டெக்னிக்
ADDED : 241 days ago
விஜய் டிவியில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தனம். எதிர்நீச்சல் புகழ் சத்யா தேவராஜன் மைய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில், கணவனை இழந்த தனம், ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து தனது கணவரின் குடும்பத்தை காப்பாற்றும் கதைக்களத்துடன் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
இதற்கிடையில் நாயகியின் கதாபாத்திரத்தையொட்டி பெண் ஆட்டோ ஓட்டுநர்களை மரியாதை செய்யும் வகையில், 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளனர். முன்னதாக சீரியலை பிரபலப்படுத்த பல யுக்திகளை கையாண்டது போல், இம்முறை நாயகியை பெண் ஆட்டோ ஓட்டுநர்களில் ஒருவராக நிறுத்தி சூப்பராக புரோமோட் செய்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.