மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
217 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
217 days ago
முன்னாள் பாலிவுட் நடிகை மற்றும் பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இன்றுடன் முடிய உள்ள கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடியது பற்றியும், வழிபட்டது பற்றியும் நீண்டதொரு பதிவை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“கும்ப மேளாவில் கலந்து கொள்வது இது மூன்றாவது முறை. மாயஜாலமாகவும், மனதைத் தொடும் விதமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
மேஜிக் என்று சொல்ல காரணம்... நான் எவ்வளவு முயற்சித்தாலும் இங்கு நான் உணர்ந்ததை விளக்க முடியவில்லை.
மனதைத் தொட என சொல்லியதன் காரணம்... நான் என் சகோதரன், அம்மாவுடன் சென்றதால் மனதிற்கு இதமாக இருந்தது. அவர்களுக்கும் உலகத்தையே அது அர்த்தப்படுத்தியது.
வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் வாழ்க்கை மற்றும் பற்றுதலின் இரட்டைத்தன்மையை உணர மட்டுமே நான் வாழ்க்கை மற்றும் மரணத்தின் பல்வேறு சுழற்சிகளிலிருந்து விடுபட விரும்பினேன். மேலும் என் குடும்பம், என் குழந்தைகள் மற்றும் நான் நேசிக்கும் மக்களை விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை…
பற்றுதலின் ஆழம் வலிமையானது என உங்களுக்குப் புரியும்போது அது மிகவும் நெகிழ்ச்சியூட்டுகிறது மற்றும் பணிவு தருகிறது. உங்கள் பற்று என்னவாக இருந்தாலும் சரி, இறுதியில் உங்கள் ஆன்மிகப் பயணமும் முன்னோக்கிப் பயணமும் தனிமையானது.
நாம் ஆன்மிக அனுபவத்தைப் பெறும் மனிதர்கள் அல்ல, ஆனால், மனித அனுபவத்தைப் பெறும் ஆன்மிக மனிதர்கள். இதைத் தாண்டி வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், என் ஆர்வம் நிச்சயமாக நான் தேடும் அனைத்து பதில்களுக்கும் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன். அதுவரை… ஹர ஹர மகாதேவ்,” என தத்துவார்த்தமாகப் பதிவிட்டுள்ளார்.
217 days ago
217 days ago