மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
218 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
218 days ago
அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை என்று அஜித் சொன்னதால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். இப்படி அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவிப்போனதை அடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்க தொடங்கினார் விக்னேஷ் சிவன். அந்த படத்தின் தயாரிப்பில் நயன்தாராவும் ஒரு பார்ட்னராக இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்து திரைக்கு வந்துள்ள டிராகன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி உள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் உற்சாகமடைந்துள்ளார்கள். காரணம் டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை வியாபாரத்தை பேசுவதற்கு பல விநியோகஸ்தர்களும் முன்வர தொடங்கி விட்டார்களாம். அதனால் இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை கொடுக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.
218 days ago
218 days ago