திரௌபதி 2 முதல் பார்வை வெளியானது
ADDED : 312 days ago
பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தில் இயக்குனரானவர் மோகன்ஜி. அதன் பிறகு திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை இயக்கினார். இதில் சில படங்கள் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. இந்த நிலையில் அடுத்தபடியாக திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் மோகன்ஜி. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கிறார். இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 14 ஆம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட பேச்சாளர்களின் செந்நீர் சரிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகளின் விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.