மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
216 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
216 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
216 days ago
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் லூசிபர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் எம்புரான் என்கிற பெயரில் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் சிறிதும் பெரிதுமாக முக்கியத்துவம் வாய்ந்த 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன்லாலும் பிரித்விராஜும் கடந்த சில நாட்களாக அதில் ஒவ்வொரு கதாபாத்திரமாக சோசியல் மீடியா மூலம் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் முதன்முறையாக மலையாள திரை உலகில் நுழைந்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் வேலாயுதம், தலைவா மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தான். இந்த படத்தில் இவர் நடிக்கும் பால்ராஜ் என்கிற கதாபாத்திர போஸ்டரை இன்று மோகன்லால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அபிமன்யு சிங் கூறுகையில், “என்னுடைய கதாபாத்திரம் நிச்சயமாக வித்தியாசமான ஒன்று. அது சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் போக்கில் இந்த கதாபாத்திரத்திற்கான மாற்றமும் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பிரித்விராஜ் இந்த படத்தை இயக்கியிருப்பதால் என்னைப் போன்ற நடிகர்களுக்கான வேலை ரொம்பவே எளிதாகி விட்டது” என்று கூறியுள்ளார்.
216 days ago
216 days ago
216 days ago