மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
216 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
216 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
216 days ago
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய நடிகராக வலம் வருபவர் கோவிந்தா. காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாம் கலந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி குறிப்பிடத்தக்க ரசிகர்களையும் வைத்திருப்பவர். தமிழில் த்ரீ ரோசஸ் என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 2015ல் இருந்து இவர் படங்களின் நடிப்பது குறைந்து போய் அதற்குப்பின் வெறும் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். குறிப்பாக கடந்த ஆறு வருடங்களாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் அவரது மனைவி சுனிதா அஹுஜா விவாகரத்திற்கு விண்ணப்பித்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தா 1986ல் சினிமாவில் நுழைந்தார். அடுத்த வருடமே சுனிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா இந்த செய்தி குறித்து கூறும்போது, “சுனிதா அஹுஜா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது தெரியும். அது விவாகரத்து மனுவா என்று எங்களுக்கு தெரியாது. அது குறித்து எங்களுக்கு எதுவும் இதுவரை நோட்டீஸ் வரவில்லை” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் கடந்த சில நாட்களாகவே கோவிந்தாவுக்கு நான் தான் நடிப்பு, நடனம் கற்றுக்கொடுத்தேன் என்பது போல சில கருத்துக்களை சுனிதா கூறி வருகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் மேனேஜர் சசி சின்ஹா. அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாகவே கோவிந்தா தனியாக ஒரு பங்களாவிலும் சுனிதா ஒரு பிளாட்டிலும் வசித்து வருகிறார்கள் என்றாலும் கூட அதற்காக அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை என்றும் கோவிந்தாவின் இயல்பான குணாதிசயமே இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார் சசி சின்ஹா.
216 days ago
216 days ago
216 days ago