மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
215 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
215 days ago
ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள படம் 'ஸ்வீட்ஹார்ட்'. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி உள்ளார். ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வருகிற மார்ச் 14ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் யுவன் சங்கர் ராஜா பேசும்போது “இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால், முதலில் இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதற்கு பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் இரண்டு பாடல்களை இணைத்தோம். இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு '' என்றார்.
215 days ago
215 days ago