ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான்
ADDED : 252 days ago
மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார். துல்கர் சல்மான் நடித்து கடைசியாக வெளிவந்த ‛லக்கி பாஸ்கர்' படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து ‛ஆர்.டி.எக்ஸ்' பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு 'ஐ யம் கேம்' என தலைப்பிட்டு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடும் விதமாக வெளியாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.