உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம்

ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம்

தேவரா படத்தை அடுத்து ஹிந்தியில் வார் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இது அவரது முதல் ஹிந்தி படமாகும். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் படம் மற்றும் தேவரா 2 படங்களில் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார். தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி இருக்கிறது. என்றாலும் தற்போது வார் 2 ஹிந்தி படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டி ஆர், விரைவில் பிரஷாந்த் நீல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். மேலும் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வேடத்தில் நடிக்கிறார் ஜூனியர் என்டிஆர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !