மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
214 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
214 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
214 days ago
மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஞ்சாக்கோ போபன், பிரியாமணி நடிப்பில் 'ஆபிசர் ஆன் டூட்டி' என்கிற படம் வெளியானது. ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை சாக்லேட் ஹீரோவாக பார்த்து வந்த குஞ்சாக்கோ போபன் இந்த படத்தில் ரப் அண்ட் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமாக காட்சி அளித்தார். அதுமட்டுமல்ல ஒரு டீன் ஏஜ் குழந்தைக்கு தந்தையான அவர் இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட ஆறு டீன் ஏஜ் இளைஞர்களின் அடாவடிகளை எதிர்கொண்டு அவர்களை அதிரடியாக விரட்டி தாக்கும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைந்தன.
இந்த ஆறு இளைஞர்களில் அவர்களது கேங் லீடராக நடித்திருந்தவர் நடிகர் ரம்ஜான். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் சிறுவயதாக இருந்த போது அதாவது 2011ல் குஞ்சாக்கோ போபன் நடித்த 'த்ரீ கிங்ஸ்' மற்றும் 'டாக்டர் லவ்' ஆகிய படங்களில் சிறுவயது குஞ்சாக்கோபன் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாக ஒரு தகவலை சொன்னார்.
இதைக் கேட்ட குஞ்சாக்கோ போபன் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனார். தன்னுடன் படத்தில் வில்லனாக மோதிய இளைஞன் தன்னுடைய சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவனா என்கிற விஷயம் படப்பிடிப்பு சமயத்தில் கூட தெரியாமல், படம் வெளியாகி இத்தனை நாட்களுக்கு பிறகு தெரியவந்ததில் அவர் நிஜமாகவே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார். இந்த விஷயத்தை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று அவரை அன்பாக கடிந்தும் கொண்டார் குஞ்சாக்கோ போபன்.
214 days ago
214 days ago
214 days ago