மேலும் செய்திகள்
2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா
197 days ago
எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில்
197 days ago
25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி'
197 days ago
‛‛தாலாட்டுதே வானம்... என தாலாட்டி, ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு... என ஏங்க வைத்து, புல்லை கூட பாட வைக்கும் புல்லாங்குழல்... என பூரிக்க செய்து, கொடியிலே மல்லிகைப்பூ... என பூக்க வைத்த தேன் குரலுக்கு சொந்தக்காரர் பிரபல பின்னணிப் பாடகரான பி.ஜெயச்சந்திரன்.
1944 மார்ச் 3ல் தம்புரான் - சுபத்ரகுஞ்சம்மா தம்பதிக்கு 3வது மகனாக எர்ணாகுளத்தில் பிறந்தார். பிறகு இரிஞ்சாலக்குடா பகுதிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். சிறு வயதில் இசை மீது ஆர்வம் கொண்டு பல இசைக்கருவிகளை கற்க தொடங்கினார். இரிஞ்சாலக்குடா கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடலை கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன் நாயர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மலையாள திரைப்படத்தில் பாடும்படி அழைத்தனர். முதலில் மலையாள படங்களில் பாடல்களை பாடத் துவங்கினார். இதன் பிறகு அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முழு நேர பாடகராக மாறினார்.
தமிழில் 1973ல் அலைகள் படத்தில் “பொன்னென்ன பூவென்ன” எனும் பாடல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இளையராஜாவின் இசையில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார். குறிப்பாக இவர் பாடிய ‛‛வசந்தகால நதியினிலே... (மூன்று முடிச்சு), கவிதை அரங்கேறும் நேரம்... (அந்த 7 நாட்கள்), காத்திருந்து காத்திருந்து... (வைதேகி காத்திருந்தாள்), தாலாட்டுதே வானம்... (கடல்மீன்கள்), கொடியிலே மல்லிகைப்பூ... (கடலோர கவிதைகள்), பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து... (அம்மன்கோயில் கிழக்காலே), புல்லை கூட பாட வைக்கும் புல்லாங்குழல்... (என்புருசன் தான் எனக்கு மட்டும் தான்)'' ஆகியவை காலங்கள் கடந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இளையராஜா தவிர்த்து ஏஆர் ரஹ்மான் இசையிலும் ‛‛கொள்ளையிலே தென்னை வைத்து(காதலன்), ஒரு தெய்வம் தந்த பூவே... (கன்னத்தில் முத்தமிட்டால்), என் மேல் விழுந்த மழைத்துளியே... (மே மாதம்), சித்திரை நிலவு சேலையில்... (வண்டிச்சோலை சின்ராசு) போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.
இந்தாண்டு துவக்கத்தில் ஜன., 9ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஜெயச்சந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் அழியா புகழாய் ரசிகர்கள் மனதில் ரிங்காரமாய் பாடிக் கொண்டே இருக்கும்.
197 days ago
197 days ago
197 days ago