உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ஹீரோவாக தொடர்ந்து பயணித்து வரும் வடிவேலு நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‛மாமன்னன்' படம் அவரை வேறுறொரு பரிமாணத்தில் காட்டியது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் 'கேங்கர்ஸ்' என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கின்றார். ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதைகளத்தில் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !