20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான்
ADDED : 262 days ago
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர் கான். இவர் ஒவ்வொரு கதையும் பொறுமையாக தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அதிக வசூலை கொடுத்த நடிகர்களில் இவர் தான் முதலிடத்தில் உள்ளார். இவரது டங்கல் படம் ரூ.2000 கோடி வசூலை கடந்து அசத்தியது.
அதன்பின் இவர் நடித்த படங்கள் வசூலை குவிக்கவில்லை. இவர் பெரிதும் எதிர்பார்த்த லால் சிங் சத்தா படமும் ஏமாற்றத்தையே தந்தது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகளாக நான் நடித்து வரும் படங்களுக்கு சம்பளமாக பெறுவதில்லை. அப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்று லாபம் தந்த பிறகே லாபத்தில் இருந்து பங்கு பெற்றுக் கொள்வேன். அதற்கு முன்பு ஒரு ரூபாய் கூட முன்பணமாக பெறுவதில்லை என தெரிவித்துள்ளார்.