உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல் பிரிவில் தமன்னா - விஜய் வர்மா

காதல் பிரிவில் தமன்னா - விஜய் வர்மா

தமிழ் சினிமாவில் சில வருடங்கள் முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ஆச்சரியப்படுத்தினார். ஆனாலும், கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அரண்மனை 4' படம் 100 கோடி படமாக அமைந்தது. அதன் பின்னரும் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. தற்போது 'ஒடேலா 2' தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.

தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். இருவரது நெருக்கமான புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன. இந்நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நண்பர்களாக மட்டுமே தொடரலாம் என முடிவு செய்துள்ளார்களாம். தங்களது பிரிவு பற்றி இருவரும் இதுவரை எதுவும் சொல்லவில்லை.

2023ம் ஆண்டு தங்கள் காதல் பற்றி தமன்னா வெளிப்படையாகப் பேசியிருந்தார். அது போல பிரிவு பற்றியும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !