ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு
ADDED : 258 days ago
கடந்த ஆண்டு வெளியான 'கொண்டல்' படத்தின் மூலம் புகழ் பெற்றவர் ஆண்டனி வர்க்கீஸ். 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு ஜல்லிக்கட்டு, பூவன், சாவர், ஆர்டிஎக்ஸ், சூப்பர் சரண்யா, இன்னலே வரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கட்டாளன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை சமீபத்தில் பெரிய வெற்றி பெற்ற 'மார்கோ' படத்தை தயாரித்த ஷெரிப் முகமது தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. பால் ஜார்ஜ் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.