ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்!
ADDED : 257 days ago
உப்பேனா பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் அடுத்து அவரது 16வது படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது கேன்சர் நோயை போராடி வென்று இந்தியா திரும்பிய அவர் கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் ராம் சரண் 16வது படத்தில் நடிப்பதற்கான டெஸ்ட் ஷூட்டிங்கில் இன்று கலந்து கொண்டு அதனை வெற்றிகரமாக முடித்தார்.