உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம்

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம்

நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க மீண்டும் நயன்தாராவே கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இன்று(மார்ச் 6) நடைபெற்றது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கடந்த வாரத்தில் இருந்தே விரதத்தை கடைபிடித்து வருகிறார் நயன்தாரா.

இந்த படத்தில் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் ஐசரி கணேஸின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அந்நிறுவனத்துடன் குஷ்பூ, நயன்தாராவின் நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சம்பள பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. தற்போது துனியா விஜய், கருடா ராம் ஆகியோர் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றனர்.

முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவரிடத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அளித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்த வீடியோவையும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !