உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய படத்தின் கதையை திருத்தணி முருகன் திருவடியில் வைத்து வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினி

புதிய படத்தின் கதையை திருத்தணி முருகன் திருவடியில் வைத்து வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினி

தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். பின்னர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரஜினியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படமும் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இயக்கப் போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அந்த புதிய படத்திற்கான கதையை தற்போது அவர் எழுதி முடித்து விட்டார். இதையடுத்து நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினி, முருகன் திருவடியில் தன்னுடைய புதிய படத்தின் கதையை வைத்து தரிசனம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !