45வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் சூர்யா
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. அவருடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், ஜெயராம், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மௌனம் பேசியதே, ஆறு படங்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். அதேபோல் ஷிவதா, சுவாசிகா, யோகி பாபு, நட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சூர்யா வக்கீல் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அய்யனாராகவும் அவர் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தனது 45 வது படத்தின் சூர்யா இரண்டு விதமான வேடங்களில் நடிப்பது தெரியவந்துள்ளது. இந்த படம் ஆன்மீகம் கலந்த கதையில் உருவாகி வருகிறது.