மேலும் செய்திகள்
ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா?
201 days ago
யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம்
201 days ago
சினிமாவில் கொடூர வில்லனாகவும், நிஜத்தில் தூய மனிதராகவும் வாழ்ந்தவர் எம்.என்.நம்பியார். அவரது 106வது பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய சில நினைவலைகள்...
மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதே எம்.என்.நம்பியார். நம்பியார் என்பது அவர் பிறந்த குலத்தின் பெயர். மெஞ்சேரி என்பது குடும்ப பெயர். கேரளாவில் பிறந்தாலும் ஊட்டியில் படித்தவர்.
13 வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுவில் சமையற்காரராக பணியில் சேர்ந்தார். 15 வயதில் 'நச்சு பொய்கை' என்ற நாடகத்தில் பெண் நீதிபதியாக நடித்தது முதல் நடிப்பு. 1935ல் 'பக்த ராம்தாஸ்' படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். ஜூபிடர் பிலிம்சில் மாத சம்பள நடிகராக சேர்ந்து 'வித்யாபதி' என்ற படத்தில் காமெடியாக நடித்தார். 1947ம் ஆண்டு 'ராஜகுமாரி' படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார். இந்த படத்தில் அவர் எம்ஜிஆரின் உதவியாளராக காமெடி கேரக்டரில் நடித்தார்.
கஞ்சன், கல்யாணி, நல்ல தங்கை படத்தில் நாயகனாக நடித்த நம்பியார் 'திகம்பர சாமியார்' என்ற படத்தில் 11 வேடத்தில் நடித்தார். 'சர்வாதிகாரி' படத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு வில்லன் ஆனார். அதன்பிறகு 60க்கும் மேற்பட்ட படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தார்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய 6 முதலமைச்சர்களுடன் நடித்துள்ளார். 750 படங்களுக்கு மேல் நடித்த நம்பியார் கடைசியாக 2006ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த 'சுதேசி' படத்தில் அவருடன் இணைந்து நடித்தார்.
நம்பியார் எந்த பெரிய விருதுகளையும் பெறவில்லை. எம்ஜிஆர் தனது அமைச்சரவையில் கலைத்துறை அமைச்சர் பதவி தர முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்து விட்டார்.
மிகப்பெரிய அய்யப்ப பக்தர். நவாப் ராஜமாணிக்கம் நடத்திய 'சுவாமி அய்யப்பன்' நாடகத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்து கடைசி வரை அய்யப்ப பக்தராகவே இருந்தார். தமிழ்நாட்டில் அய்யப்ப பக்தர்கள் அதிகரிக்க நம்பியாரும் மிக முக்கிய காரணம். கடைசி வரை சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்த நம்பியார். தனது மனைவி கையால் சமைத்த உணவையே சாப்பிடுவார். வெளியூர் படப்பிடிப்புகளுக்கு மனைவியையும் உடன் அழைத்து செல்வார்.
201 days ago
201 days ago