மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
209 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
209 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
209 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
209 days ago
சென்னை: சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை என லண்டனில் முதல் சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார். 1500 படங்களுக்கு மேல் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார்.
'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை இன்று (மார்ச் 8) லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்ய உள்ளார். முன்னதாக சென்னையில் அவரை முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்தினர். தொடர்ந்து லண்டன் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, இது எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை என்றார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் ரஜினி வெளியிட்ட பதிவில், ‛‛பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இளையராஜாவை ‛சாமி' என்றே அழைப்பார் ரஜினி. அதனாலேயே இன்று வாழ்த்தும் போதும் அவரை சாமி என குறிப்பிட்டுள்ளார் ரஜினி.
209 days ago
209 days ago
209 days ago
209 days ago