சொன்னாலும் கேட்க மாட்றாங்க : நடிகை ருக்சார் தில்லான் கோபம்
ADDED : 210 days ago
லண்டனில் பிறந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ருக்சார் தில்லான். தற்போது தெலுங்கில் தில்ருபா என்ற படத்தில் கிரண் அப்பாவரம் ஜோடியாக நடித்துள்ளார். வஸ்வா கருண் இயக்கி உள்ளார். இப்படம் மார்ச் 14ல் வெளியாகிறது.
இப்பட விழாவில் பேசிய ருக்சார், ‛‛நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால் சில போட்டோகிராபர்கள் என் அனுமதியின்றி போட்டோ எடுக்காதீங்க என சொன்னாலும் எடுக்கிறார்கள். நான் மேடையில், வெளியிடங்களில் அசவுகரியமாக உணர்ந்தாலும் அதையே செய்கிறார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை, இதை யாரும் தவறாக எடுக்க வேண்டாம்'' என்றார்.