மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
208 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
208 days ago
தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின் என்று போற்றப்பட்டவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், சிவாஜி கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு நிகரான நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்தவர். முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய காமெடி நடிகர். சந்திரபாபு நடிகராக மட்டுமல்ல பாடகராகவும் பெரிய வெற்றி பெற்றவர். அவரது தனித்துவமான வேடிக்கை குரல், ரசிகர்களை கட்டிப்போட்டது.
அவர் பாடிய இரண்டு முக்கியமான பாடல்கள் 'நான் ஒரு முட்டாளுங்க, என நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...' மற்றும் 'வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. இந்த பாடல் போலவே அவரது கடைசி காலம் அமைந்தது.
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து வெற்றி பெற்ற சந்திரபாபுவால் மதுவில் இருந்து வெளியேற முடியவில்லை. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் நடித்தார். ஒரே நாளில் நான்கு படங்களில் நடித்தார். ஆனால் அவர் சம்பாதித்த பணம் மதுவாலும், நண்பர்களின் துரோகத்தாலும் அவரை அறியாமலேயே கரைந்து போனது.
ஒருகட்டத்தில் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். சம்பாதித்து இவர் கட்டிய பங்களாவைப் பற்றி கதைகதையாகச் சொல்வார்கள். வீட்டின் முதல் மாடியில் கார் பார்க்கிங், பின் பகுதியில் நீச்சல் குளம் என எம்.ஜி.ஆரை விட சொகுசாக வாழ்ந்தவர். இவரது திருமண வாழ்க்கையும் திடுக்கிடும் திருப்பங்களை கொண்டதாக அமைந்தது.
தனது இறுதி நாட்களில் வறுமைக்கு உள்ளாகி, மருத்துவ செலவுக்குகூட கையில் பணம் இல்லாமல் சென்னை அரசு ஆஸ்பத்திரி பொது வார்டில் சிகிச்சை பெற்றார். கடைசியில் வறுமையாலேயே இறந்தும் போனார்.
இன்று அவரது 51வது நினைவு நாள்.
208 days ago
208 days ago