25வது திருமண நாள்: பழனி முருகன் கோவிலில் குஷ்பு, சுந்தர் சி
ADDED : 208 days ago
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்புவும், அதே காலகட்டத்தில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது வரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுந்தர் சியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்குத் திருமணமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று இருவரும் வழிபட்டுள்ளனர். சுந்தர் சி முடி காணிக்கையும் செலுத்தியுள்ளார்.
“இன்று எனது 25வது திருமண நாளில் எனது திருமணப் புடவையை அணிவதில் மிகவும் பெருமை அடைகிறேன். பழனி முருகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதை விட எங்கள் நாளைத் தொடங்குவதற்கு இதைவிட சிறந்த வழியை நாங்கள் கேட்டிருக்க முடியாது. இன்று நாங்கள் இப்படி இருப்பதற்கு முருகனின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவும் நடக்காது,” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.