500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா'
ADDED : 234 days ago
லட்சுமண் உடேகர் இயக்கத்தில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்த 'ச்சாவா' படம் 500 கோடி நிகர வசூலைக் கடந்துள்ளது. 2025ல் பாலிவுட்டின் முதல் பெரிய வெற்றிப் படமாக இப்படம் அமைந்துள்ளது.
மொத்த வசூலாக 600 கோடியைக் கடந்துள்ள இந்தப் படம் தெலுங்கில் டப்பிங் ஆகி இந்த வாரம் வெளியானது. இரண்டே நாட்களில் அங்கு 6 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஒரு படம் வெளியாகி 23வது நாளில் மட்டும் அதிகபட்ச வசூல் என்ற சாதனையை 13 கோடியுடன் இப்படம் படைத்துள்ளது.
தென்னிந்திய மொழிகளிலிருந்து பான் இந்தியா படங்களான வெளியான சில பீரியட் படங்கள் நன்றாக வசூலித்தன. அதே போல இந்த சரித்திரப் படமும் ஹிந்தியில் மட்டுமே வசூலை அள்ளியுள்ளது. இது பாலிவுட்டினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.