மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
207 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
207 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
207 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
207 days ago
அதிகமான சம்பளம் என்றால் அது பாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமே கொடுப்பார்கள். கடந்த பல வருடங்களாகவே அதுதான் நடந்து வருகிறது. இப்போதும் கூட அதிகமான சம்பளத்தைப் பெறும் நடிகைகளாக அவர்கள்தான் இருந்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தீபிகா படுகோனே 25 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அவருக்கு அடுத்து கங்கனா ரணவத், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், ஆலியா பட் ஆகியோரும் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தகவல்.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில், திரிஷா, நயன்தாரா ஆகியோர் தற்போது 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களாம். அவர்களுக்கு அடுத்து சமந்தா, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்கிறார்கள்.
திரிஷா, நயன்தாரா இருவரும் 40 வயதைக் கடந்துவிட்டார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. மற்ற நடிகைகளில் ராஷ்மிகாவைத் தவிர அனைவருமே 30 வயதைக் கடந்துவிட்டார்கள். ராஷ்மிகாவும் 30ஐ நெருங்கி வருகிறார்.
20 பிளஸ் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறிமுகமாகும் சிலரும் சில படங்களுக்கு மேல் காணாமல் போய்விடுகிறார்கள்.
207 days ago
207 days ago
207 days ago
207 days ago