'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. அதன்பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்.
சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்து வெளிவந்த 'பணி' திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் அபிநயா.
அவரது நீண்ட நாள் நண்பருடன் அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் 15 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகிறார்களாம். கோயில் மணி ஒன்றை அவரும், அவரது வருங்காலக் கணவரும் அடிப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, “மணிகளையும் அடியுங்கள்… ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்… என்றென்றும் இன்று தொடங்குகிறது,” என்று தன்னுடைய திருமண நிச்சயம் குறித்து பதிவிட்டுள்ளார்.