மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
180 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
180 days ago
அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர்
180 days ago
இசையமைப்பாளர் இளையராஜா, 81, இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' சிம்பொனியை, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் நேற்று அரங்கேற்றினார். அவரது இசை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைந்தது. இதன் வாயிலாக, ஆசியாவிலேயே சினிமா துறையில் இருந்து லண்டனில் இந்த சாதனையைப் படைத்த முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார். மேலும், தெற்காசியாவில் இருந்து முழு சிம்பொனி தொகுப்பை எழுதி இசையமைத்த முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில், பிரபல இசைக்கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தன்னுடைய சிம்பொனி இசைத்தொகுப்பை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சிம்பொனி நம்பர் 01. புதிய தொடக்கம்.. 4 மூவ்மெண்ட்ஸ்' என்று குறிப்பிட்டு இருக்கும் அவர் 21.06.2026 உலக இசை நாளில் என்னுடைய சிம்பொனி இசையை வெளியிட இருக்கிறேன்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
லிடியன் நாதஸ்வரம் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: ''இளையராஜாவின் முதல் சிம்பொனி 'வேலியன்ட்' லண்டனில் நேற்று அரங்கேற்றினார். பெரும் மகிழ்ச்சியளித்தது. நான் இளையராஜா ஸ்டூடியோவிற்கு செல்லும்போதெல்லாம் இசைப்பற்றிய நிறைய பகிர்ந்துள்ளார். சிம்பொனி பற்றியும் பேசியுள்ளார். என்னையும் சிம்பொனி பண்ண வேண்டும் என ஊக்கம் அளித்தார். அவரின் ஊக்கத்தால் என்னுடைய முதல் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கிறேன். 'நியூ பிகினிங்' என்ற பெயரிலான எனது முதல் சிம்பொனியை அடுத்தாண்டு ஜூன் 21ம் தேதி உலக இசை தினத்தில் அரங்கேற்ற உள்ளேன்'' என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் இசைப்பள்ளியில் பயின்றவர் லிடியன் நாதஸ்வரம். பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கத்தெரிந்த இவர், சிம்பொனி அரங்கேற்ற இருப்பது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்க உள்ளது.
180 days ago
180 days ago
180 days ago