உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி

சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி

நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் கார்த்தி. இந்தப்படத்தின் மற்ற பணிகள் நடந்து வருகின்றன. படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்தப்படியாக சர்தார் படத்தின் தொடர்ச்சியாக பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் , ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுஒருபுறம் இருக்க படத்தின் மற்ற பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று(மார்ச் 10) சர்தார் 2 படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை கார்த்தி தொடங்கியுள்ளார். இதுதொடர்பான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !