பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்!
ADDED : 202 days ago
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'லவ் டுடே, டிராகன்' ஆகிய படங்கள் தொடர் வெற்றியை பெற்றது. தற்போது அவர் 'எல்.ஐ.கே' படத்தில் நடித்து முடித்து இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இன்றைய சென்சேஷன் சாய் அபயங்கர் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.