டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா
ADDED : 243 days ago
தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ‛டெஸ்ட்'. மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இரு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் முதலில் தியேட்டர் வெளியீடாக தயாரானது. இப்போது ஓடிடியில் ஏப்., 4ல் ரிலீஸாகிறது. இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
தற்போது நயன்தாராவின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். குமுதா என்ற வேடத்தில் ஆசிரியையாக அவர் நடித்துள்ளார். நயன்தாரா கூறுகையில், ‛‛காதல், அசைக்க முடியாத நம்பிக்கையின் கதைதான் டெஸ்ட் . அதை மக்கள் காண ஆவலுடன் இருக்கிறேன்'' என்றார்.