இதயம் சீரியலிலிருந்து விலகிய கதாநாயகி
ADDED : 209 days ago
ஜீ தமிழில் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல ரீச் பெற்றிருந்த தொடர் 'இதயம்'. இதில், ஜனனி அசோக் குமார், ரிச்சர்ட் ஜோஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, புவி அரசு, ரியா விஸ்வநாதன் ஆகியோருடன் பல முன்னணி பிரபலங்கள் நடத்தி வந்தனர். ஜனனி அசோக் குமார் ஹீரோயினாக நடித்து வந்த இந்த தொடர் அவரது கேரியரில் முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அவர் திடீரென இதயம் சீரியலை விட்டு விலகப்போவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், பாரதி சாப்டர் முடிந்தாலும் மிக விரைவில் புதிய சீரியலில் உங்களை சந்திப்பேன் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.