மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
198 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
198 days ago
காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது ஒரு மாணவர், உங்களது ஒரிஜினல் கலரே இதுதானா? என்று அவரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ‛‛நான் ரொம்ப கலரும் இல்லை. ரொம்ப கருப்பும் இல்லை. மாநிறம்தான். இப்படி மாநிறத்தில் இருக்கும் பெண்கள் தான் அழகாகவும் கலையாகவும் இருப்பார்கள். நம்ம ஊரு கலர்தான். அதுதானே அழகு'' என்று அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
198 days ago
198 days ago