உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ?

அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ?

கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'காட்டி'. படத்தை பான் இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 18ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கிறார். இயக்குனர் கிரிஷ், அனுஷ்கா கூட்டணி 'வேதம்' படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைகிறது.

இப்படம் பற்றிய அப்டேட்டுகளை ஜனவரி மாதம் கொடுத்தனர். அதன்பின் வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படம் பற்றிய எந்தத் தகவலும் வராமல் இருப்பதால் படத்தைத் தள்ளி வைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !