உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை

பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை

ரஜினிக்கு ஜோடியாக பல பாலிவுட் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் அனிதா ராஜ். படம் 'தாய்வீடு'.

ரஜினிகாந்த், அனிதாராஜ் நடித்த 'ஜீத் ஹமாரி' என்ற பாலிவுட் படம்தான் தமிழில் 'தாய்வீடு' என்ற பெயரிலும் தயாரானது. இரண்டிலும் அனிதா ராஜ் நடித்தார். ஹிந்தியில் ரஞ்சனா நடித்த கேரக்டரில் தமிழில் சுஹாசினி நடித்தார். ஹிந்தியில் ராஜேஷ் ரோஷன் நடித்த கேரக்டரில் தமிழில் ஜெய்சங்கர் நடித்தார். தமிழ் இயக்குனர் ஆர்.தியாகராஜன் இயக்கினார். ஹிந்தி படத்திற்கு பப்பிலஹரி இசை அமைத்தார். தமிழ் படத்திற்கு சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர்.

இந்த படத்திற்கு பிறகு அனிதா ராஜ் தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை. தற்போது சின்னத்திரை தொடர்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !