தணிக்கை குழுவினர் பாராட்டிய ‛குட் பேட் அக்லி'
ADDED : 192 days ago
அஜித்குமார் நடித்து வருகிற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வெளிவரும் படம் ‛குட் பேட் அக்லி'. மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஜித்குமார், திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த திரைப்படத்துக்காக வெளிநாடுகளில் சென்சாருக்கு பதிவு செய்துள்ளனர் படக்குழு. படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படம் வித்தியாசமான திரைக்கதையுடன் அஜித்தின் பிரமாண்ட நடிப்பும் வெகுவாக கவர்ந்ததாக தணிக்கை குழு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.