ஓடிடி.,யிலும் ஹிட் அடித்த ‛டிராகன்'
ADDED : 194 days ago
வாரம் வாரம் திரையரங்கில் படங்கள் வெளியாகும் எண்ணிக்கையை விட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களே அதிகம். அந்த வகையில் பல ஓடிடி தளங்கள் இருந்தாலும் குறிப்பாக நெட்பிளிக்ஸ் அதிக படங்களை வெளியிடுகிறது. அதன்படி பார்க்கும்போது சமீபத்தில் அதாவது சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று 5 படங்கள் வெளியாகியது.
டிராகன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், 2கே லவ் ஸ்டோரி, பேபி அண்ட் பேபி, ஆபீசர் ஆன் டூட்டி உட்பட மொத்தம் 28 படங்கள் வெவ்வேறு தளங்களில் வெளியிடப்பட்டது. அதில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‛டிராகன்' திரைப்படம் அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக இந்த வாரம் அமைந்துள்ளது.
இதனால் ஏஜிஎஸ் படக்குழு அடுத்து தயாரிக்கும் படங்களையும் இதே நிறுவனத்துக்கே தங்கள் படத்தின் ஓடிடி உரிமைகளை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.