இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல்
ADDED : 249 days ago
நடிகர் அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ளன. இது ஒருபுறம் இருக்க, தனக்கு பிடித்த கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது.
அதன்பிறகு, போர்ச்சுக்கல் போட்டியிலும் பங்கேற்ற அஜித் அணி, தற்போது இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளது. இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12எச் ரேஸில் அவர் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து இருக்கிறது.
வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்திய கொடி உடன் சென்றார். அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.