அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா?
ADDED : 249 days ago
புஷ்பா-2 படத்திற்கு பிறகு கொரட்டல்ல சிவா, சந்தீப் ரெட்டி வங்கா போன்ற தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ள அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்திலும் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இயக்கிய ‛ஜவான்' படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் இந்த படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
இந்த படத்தை இயக்குவதற்காக அட்லி 100 கோடி சம்பளம் பேசி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் நடிப்பதற்கு 175 கோடி சம்பளம் கேட்டுள்ள அல்லு அர்ஜுன் லாபத்தில் 15 சதவீதம் தனக்கு தர வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.