கும்பகோணம் கோவில்களில் சோபிதா துலிபலா சாமி தரிசனம்
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக 'வானதி' கதாபாத்திரத்தில் நடித்தவர் சோபிதா துலிபலா. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைக் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் கும்பகோணம் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார் சோபிதா. அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில், 'மகத்துவமானது' என்ற தலைப்பில் சுமார் 10 புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
கோவில் சுவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியத்தை ரசிப்பது, சில கோவில் வளாகங்களில் இருப்பது, கோயில் யானைக்கு முன்பாக எடுத்துக் கொண்ட போட்டோ, குளத்திற்கு முன்பாக எடுத்துக் கொண்ட போட்டோ, பில்டர் காபி ஆகிய புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
எந்தெந்த கோவில்கள் என அவர் பதிவிடாததால் ரசிகர்கள் பலரும் அவை எந்தெந்த கோவில்கள் என பதிவிட்டுள்ளனர்.
திருமணம் முடிந்த பிறகு வேண்டுதல் காரணமான அவர் கோவில்களுக்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. உடன் கணவர் நாக சைதன்யா வந்தாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.