ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு'
ADDED : 201 days ago
சமீபத்தில் வெளியான படம் 'பெருசு'. இந்தப் படத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இளங்கோ ராம் இயக்கி இருந்தார்.
அடல்ட் கன்டென்ட் காமெடி படமான இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்களின் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஹிந்தி ரீமேக் உரிமையினை ஹன்சல் மேத்தா மற்றும் முகேஷ் ஷாப்ரா ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். ஹிந்தியில் யார் இயக்கவுள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட 'பெருசு' திரைப்படத்தின் ஓடிடி உரிமை வெளியீட்டிற்கு முன்பே நல்ல தொகைக்கு விற்கப்பட்டுவிட்டது.