பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார்
ADDED : 201 days ago
1970 முதல் 80 வரை கமல்ஹாசனும் சிவகுமாரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். அவற்றில் முக்கியமான படம் 1975ம் ஆண்டு வெளிவந்த 'தங்கத்திலே வைரம்'.
சொர்ணம் இயக்கிய இந்த படம் முழு நீள காமெடி படமாக தயாரானது. படத்தின் கதையை கலைஞானம் எழுதியிருந்தார். கமலஹாசன், சிவகுமார், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, விகே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர். சூரலையா ப்ரொடக்ஷன் சார்பில் சவுந்தர் தயாரித்திருந்தார்.
கதைப்படி கமல்ஹாசனின் காதலியான ஸ்ரீபிரியாவை வெறுப்பேற்ற கமலின் நண்பர் சிவகுமார் பெண் வேடம் அணிந்து அவருடைய காதலியாக சில காட்சிகள் நடித்தார். இந்த காட்சி அப்போது பெரும் வரவேற்பு பெற்றது.