எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது
ADDED : 197 days ago
தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் என்ற படத்தில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு 2.0, தெறி, தங்க மகன், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்திருந்தார். ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி ஜாக்சன், அதையடுத்து அவரை பிரிந்து விட்டார். அதன்பின் 2021ம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்விக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான எமி ஜாக்சனுக்கு தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனுக்கு ஆஸ்கர் அலெக்ஸாண்டர் வெஸ்ட்விக் என பெயரிட்டுள்ளனர்.