வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே
ADDED : 202 days ago
தமிழில் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே, அதையடுத்து விஜய் உடன் ஜனநாயகன், ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 படங்களில் நடித்திருப்பவர், ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த நிலையில் ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வந்தார் பூஜா ஹெக்டே. இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு ரிஷிகேஷில் நடைபெற்று வந்தது. அங்கு படப்பிடிப்பின் கடைசி நாளில் வருண் தவானுடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆற்றில் குதித்துள்ளார். அந்த வீடியோவை இணையப்பக்கத்தில் வெளியிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.