பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாம் பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல்
ADDED : 195 days ago
கடந்த 2010ம் ஆண்டில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் வெளியான படம் பாஸ் என்ற பாஸ்கரன். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் ராஜேஷ்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் நானும், ஆர்யாவும் ஈடுபட்டுள்ளோம். இந்தப் படத்திற்காக ஒரு நல்ல கதையை உருவாக்கி இருக்கிறேன். அதனால் மீண்டும் ஆர்யா, நயன்தாராவுடன் சந்தானமும் இணைந்தால் அந்த படம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகும். சந்தானத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது'' என்கிறார் ராஜேஷ்.எம்.