சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம்
ADDED : 198 days ago
தெலுங்கில் நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி உள்ள படம் ராபின்ஹூட். வெங்கி குடுமுலா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் மார்ச் 28ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வேடத்தில் நடிக்க இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், 2.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளாராம். ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு தெலுங்கு சினிமாவில் இதுவரை யாரும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்கிறார்கள்.