வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்!
ADDED : 238 days ago
யூடியூப்பில் வி.ஜே. சித்து விளாக்ஸ் மூலம் பிரபலமானவர் சித்து. சமீபத்தில் ‛டிராகன்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், வி.ஜே. சித்து சினிமாவிற்கு வந்ததே இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையுடன் தான். தற்போது அது நிறைவேறியது என்கிறார்கள். அதன்படி, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை வி.ஜே.சித்து இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான புரோமோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த புரோமோ வீடியோவில் வி.ஜே. சித்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கின்றனர். மே மாதத்தில் இதற்கான படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.